மாபெரும் தமிழ்க் கனவு-
தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு அருப்புக்கோட்டை Anut அரங்கத்தில் 13.04.2023 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் செழுமையையும் சமூக சமத்துவத்தையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்லும் வகையில் முன்னெடுக்கப்பட்டள்ள இத்திட்டத்தின் கீழ் பல்வேறு தளங்களில் இயங்குகிற ஆளுமைகள் சொற்பொழிவுகளாற்றவுள்ளார்கள்.
அதன்படி, அருப்புக்கோட்டையில் நடைபெறுகிற மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியில்
மாண்புமிகு தூத்துக்குடி நாடளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்கள்
“சமூகநீதி” என்ற தலைப்பிலும்
திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள்
திசையும், திசைகாட்டியும் என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்ற உள்ளார்கள்.